தூய்மை இந்தியா திட்டம் மூலம் திறந்தவெளியில் மலம் கழித்தல் இல்லாத 1 லட்சத்துக்கும் அதிகமான கிராமங்கள்!
|நாடு முழுவதும் 1 லட்சத்துக்கும் அதிகமான கிராமங்கள், திறந்தவெளியில் மலம் கழித்தல் இல்லாத அந்தஸ்தைப் பெற்றுள்ளன.
புதுடெல்லி,
நாடு முழுவதும் 1 லட்சத்துக்கும் அதிகமான கிராமங்கள், திறந்தவெளியில் மலம் கழித்தல் இல்லாத அந்தஸ்தைப் பெற்றுள்ளன. இதன்மூலம் ஒரு முக்கியமான மைல்கல்லை இந்தியா எட்டியுள்ளது.
தூய்மை இந்தியா திட்டம் (ஸ்வச் பாரத் மிஷன்) கிராமப்புற சுகாதாரம் மற்றும் பாதுகாப்பான சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை வலுப்படுத்துகிறது மற்றும் அதன் மூலம் அதன் குடிமக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துகிறது.
சுமார் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு, பிரதமர் மோடி தூய்மை இந்தியா திட்டத்தை தொடங்கினார். திறந்த வெளியில் மலம் கழித்தல் இல்லாத நாட்டை உருவாக்குவதே இதன் நோக்கமாகும்.
அரசின் முதன்மைத் திட்டமான 'தூய்மை இந்தியா திட்டம் (ஸ்வச் பாரத் மிஷன் - கிராமீன்)' மூலம், நாடு முழுவதும் 1 லட்சத்து 1,462 கிராமங்களுக்கு திறந்தவெளி மலம் கழித்தல் இல்லாத (ஓடிஎப் பிளஸ்) அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு, தெலுங்கானா, ஒடிசா, உத்தரப் பிரதேசம் மற்றும் இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நாட்டிலேயே அதிக எண்ணிக்கையிலான கிராமங்கள் ஓடிஎப் பிளஸ் அங்கீகாரம் பெற்றுள்ளன.
கிராமப்புறங்களில் திட மற்றும் திரவ கழிவு மேலாண்மை என்பது, ஒப்பீட்டளவில் புதிய முயற்சி என்பதால் இந்த வெற்றியை குறைத்து மதிப்பிடக்கூடாது. கழிவறைகள் மூலம் திடக்கழிவு மேலாண்மை பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டாலும், குழாய் நீர் விநியோகத்தில் இருந்து கழிவு நீரை மறுசுழற்சி செய்ய வேண்டிய அவசியம் தற்போது ஏற்பட்டுள்ளது. எனவே சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
மேலும், வாழ்க்கை முறை மாற்றங்களால் கிராமப்புறங்களில் பேக்கேஜ் செய்யப்பட்ட உணவுகளின் நுகர்வு அதிகரித்துள்ளது. இதனால், பிளாஸ்டிக் கழிவுகள், கிராமப்புற சூழலையும் மாசுபடுத்துகிறது. இதன் காரணமாக, கிராமப்புறங்களை சுத்தப்படுத்த சரியான திட்டமிடல் தேவை.
கிராமப்புறங்களில் திறந்த வெளியில் மலம் கழிப்பதில்லை என்ற திட்டத்தை ஐ.நா சபை முடிவு செய்துள்ளது. இந்தத் திட்டத்தின்படி இந்தியா இதை 11 ஆண்டுகள் முன்னதாகவே சாதித்தது.
ஓடிஎப் பிளஸ் கிராமமாக அறிவிக்க, குடிநீர் மற்றும் சுகாதாரத்துறை பல நடைமுறைகளை மேற்கொண்டுள்ளது. கரிம கழிவு மேலாண்மை, பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை, கழிவுநீர் மேலாண்மை மற்றும் திடக்கழிவு மேலாண்மை ஆகியவற்றை முடித்த கிராமங்கள் (ஓடிஎப் பிளஸ்) திறந்தவெளியில் மலம் கழித்தல் இல்லாததாக அங்கீகரிக்கப்படுகின்றன.