பெங்களூரு சாம்ராஜ்பேட்டை ஈத்கா மைதானத்தில் சுதந்திர தினவிழா கோலாகலமாக கொண்டாடப்படும்; முன்னாள் மந்திரி ஜமீர் அகமதுகான் பேட்டி
|பெங்களூரு சாம்ராஜ்பேட்டை ஈத்கா மைதானத்தில் சுதந்திர தினவிழா கோலாகலமாக கொண்டாடப்படும் என்று முன்னாள் மந்திரி ஜமீர் அகமதுகான் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:
பெங்களூரு சாம்ராஜ்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ.வும், முன்னாள் மந்திரியுமான ஜமீர் அகமதுகான் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், ஈத்கா மைதான விவகாரத்தில், அது வருவாய்த்துறைக்கு சொந்தம் என்று மாநகராட்சி அறிவித்துள்ளது. இந்த விவகாரத்தை தேவையில்லாமல் பெரிதுபடுத்த வேண்டாம். ஈத்கா மைதானத்தில் வருகிற 15-ந் தேதி சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்படும். நானே முன் நின்று பெரிய அளவில் தேசிய கொடியை ஏற்றி சுதந்திர தினவிழாவில் பங்கேற்பேன்.
இதுபோல், ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினம், குடியரசு தினத்தன்று ஈத்கா மைதானத்தில் தேசிய கொடி ஏற்றி கொண்டாடப்படும். கன்னட ராஜ்யோத்சவா விழாவும் ஈத்கா மைதானத்தில் கொண்டாடப்படும். இதற்காக தான் மைதானத்திற்கு வந்து நானே நேரில் பார்வையிட்டேன். ஈத்கா மைதான விவகாரத்தில் தேவையில்லாத பிரச்சினைகளை ஏற்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார்.