< Back
தேசிய செய்திகள்
செங்கோட்டையில் பிரதமர் மோடி ஆற்றும் கடைசி சுதந்திர தின உரை இதுதான் - மம்தா பானர்ஜி
தேசிய செய்திகள்

செங்கோட்டையில் பிரதமர் மோடி ஆற்றும் கடைசி சுதந்திர தின உரை இதுதான் - மம்தா பானர்ஜி

தினத்தந்தி
|
14 Aug 2023 11:19 PM IST

நாளை நடைபெறும் சுதந்திர தின விழாவில் செங்கோட்டையில் பிரதமர் பேசுவதே அவரது கடைசி சுதந்திர தின உரையாக இருக்கும் என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்

கொல்கத்தா,

இந்த ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியின் சுதந்திர தின உரை டெல்லி செங்கோட்டையில் இருந்து பிரதமராக இருக்கும் அவரது கடைசி உரையாக இருக்கும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பெகாலாவில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஏற்பாடு செய்த சுதந்திர தினத்திற்கு முந்தைய நிகழ்ச்சியில் பேசிய அவர், "எதிர்க்கட்சியான இந்தியா விரைவில் களத்தில் இறங்கும். செங்கோட்டையில் நாளை நடைபெற உள்ள சுதந்திர தின விழாவில் இடம்பெறும் பிரதமரின் உரை, அவர் கொடுக்கும் கடைசி உரையாக இதுதான் இருக்கும்.

அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்று மத்தியில் ஆட்சியைக் கைப்பற்றும். எதிர்க்கட்சிகளின் கூட்டணி இந்தியா முழுவதும் பாஜகவை வீழ்த்தும். மேற்குவங்காளத்தில் மாபெரும் அளவில் பாஜக வீழ்த்தப்படும். பிரதமராகும் ஆசை எனக்கு இல்லை. பாஜக வீழ்த்தப்பட வேண்டும். பாஜக ரபேல் போன்ற விஷயங்களில் ஊழலில் பெரிய அளவில் ஈடுபட்டுள்ளது. மேற்குவங்காளத்தில் பாஜக மீது ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. நாங்கள் ஊழல் புகார்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறோம்" என்று அவர் கூறினார்.

மேலும் செய்திகள்