< Back
தேசிய செய்திகள்
சுதந்திர தின கொண்டாட்டம்; கலைஞர்கள் நடனத்தின் ஊடே உடற்பயிற்சியில் ஈடுபட்ட மம்தா பானர்ஜி...!!
தேசிய செய்திகள்

சுதந்திர தின கொண்டாட்டம்; கலைஞர்கள் நடனத்தின் ஊடே உடற்பயிற்சியில் ஈடுபட்ட மம்தா பானர்ஜி...!!

தினத்தந்தி
|
15 Aug 2022 12:49 PM IST

சுதந்திர தின கொண்டாட்டத்தில் நாட்டுப்புற கலைஞர்களின் நடனத்தின் ஊடே மம்தா பானர்ஜி உடற்பயிற்சியில் ஈடுபட்ட காட்சிகள் வெளிவந்து உள்ளன.

கொல்கத்தா,



இந்தியாவின் 76-வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் சிறப்புடன் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு, பல்வேறு மாநிலங்களின் தலைநகரங்களில், முதல்-மந்திரிகள் தேசிய கொடியை ஏற்றி வணக்கம் செலுத்தியுள்ளனர்.

இதன்படி, மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரில் சுதந்திர தின கொண்டாட்டங்கள் நடந்தன. இதில், முதல்-மந்திரி மம்தா பானர்ஜியும் கலந்து கொண்டார். கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நாட்டுப்புற கலைஞர்களின் நடனம் இடம் பெற்றது.

இதில், மம்தா பானர்ஜியும் பங்கேற்றார். அவர் பெண் கலைஞர்களுடன் இணைந்து கொண்டார். அவர்கள் ஆடிய நடனத்தின் ஊடே சென்ற அவர் சிறிது நேரம் அவர்களுக்கு இணையாக நடனம் ஆடினார். எனினும், கலைஞர்கள் ஒருபுறம் நடனம் ஆடும்போது, இவர் கைகளை முன்னும், பின்னும் அசைத்து உடற்பயிற்சியில் ஈடுபட்ட காட்சிகள் வெளிவந்து உள்ளன.



மேலும் செய்திகள்