< Back
தேசிய செய்திகள்
சுதந்திர தின கொண்டாட்டம்; டெல்லி செங்கோட்டையில் 10,000 போலீசார் பாதுகாப்பு
தேசிய செய்திகள்

சுதந்திர தின கொண்டாட்டம்; டெல்லி செங்கோட்டையில் 10,000 போலீசார் பாதுகாப்பு

தினத்தந்தி
|
13 Aug 2023 3:13 PM IST

நாடு முழுவதும் உச்ச கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

புதுடெல்லி,

நாட்டின் 76-வது சுதந்திர தினம் நாளை மறுநாள் (15-ந் தேதி) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக் கொடி ஏற்றுகிறார். இதையொட்டி தலைநகர் டெல்லி உட்பட நாடு முழுவதும் உச்ச கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. டெல்லி செங்கோட்டையில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.சுதந்திர தின விழா கொண்டாடும் பகுதியை சுற்றிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சுமார் 10,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 1,000 சிசிடிவி கேமரா பொருத்தி கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் டெல்லி செங்கோட்டை பகுதியில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்