கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரிப்பு
|கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்கப்பட்டு உள்ளது.
காவிரி நதிநீர் பகிர்வு தொடர்பாக காவிரி மேலாண்மை ஆணையத்தின் 23-வது கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கர்நாடகா ஆகிய 4 மாநில அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு அடுத்த 15 நாட்களுக்கு 5,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்க, கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. செப்டம்பர் 12-ம் தேதி வரை வினாடிக்கு 5000 கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என எஸ்.கே.கல்தர் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
இந்த நிலையில் கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. இரு அணைகளில் இருந்து 4,293 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில் இன்று தண்ணீர் திறப்பு 6,398 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
கே.ஆர்.எஸ் அணையில் இருந்து 4,398 கனஅடியும் கபினி அணையிலிருந்து 2,000 கன அடி நீரும் காவிரியில் திறந்து விடப்பட்டு வருகிறது. இன்று காலை நிலவரப்படி வெளியேற்றப்படும் நீரின் அளவு 6,398 கன அடியாக உயர்ந்துள்ளது.