< Back
தேசிய செய்திகள்
கர்நாடக அணைகளில் நீர் திறப்பு அதிகரிப்பு..!
தேசிய செய்திகள்

கர்நாடக அணைகளில் நீர் திறப்பு அதிகரிப்பு..!

தினத்தந்தி
|
24 July 2023 9:59 AM IST

நீர்வரத்து அதிகரித்துள்ளதால் கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு,

கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அணைகளும் வேகமாக நிரம்புகிறது. கனமழையால் அணைக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இந்தநிலையில், கர்நாடக அணைகள் வேகமாக நிரம்பி வருவதால் அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் நீர் திறப்பு விநாடிக்கு 12,536 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கபினி அணையிலிருந்து 10,000 கன அடி நீரும், கே.ஆர்.எஸ். அணையிலிருந்து 2,500 கன அடி நீரும் திறக்கப்படுகிறது. கிருஷ்ணராஜசாகர் அணைக்கு காலை நிலவரப்படி நீர்வரத்து விநாடிக்கு 29,552 கன அடியாக உள்ளது. கபினி அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 20,749 கன அடியாக உள்ளது.

காவிரி ஆற்றில் நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால் இந்த தண்ணீர் அகண்ட காவிரியாக தமிழகம் நோக்கி வந்து கொண்டிருக்கிறது. இதனால் குறைந்து வரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம் உயரும் என கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்