< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
கர்நாடக அணைகளுக்கு நீர் வரத்து அதிகரிப்பு - காவிரியில் நீர் திறப்பு குறைப்பு...!
|3 Oct 2023 11:41 AM IST
கர்நாடகாவில் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்த போதும் காவிரியில் திறந்துவிடும் நீரின் அளவை குறைத்துள்ளது.
பெங்களூரு,
கர்நாடகாவில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகின்றது. இந்த தொடர் கனமழையின் காரணமாக அங்குள்ள அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. குறிப்பாக கே.ஆர்.எஸ் மற்றும் கபினி அணைகளுக்கான நீர் வரத்து அதிகரித்துள்ளது.
அதன்படி, கபினி மற்றும் கே.ஆர்.எஸ் ஆகிய அணைகளுக்கு நீர்வரத்தின் அளவு 17,200 கன அடியாக அதிகரித்துள்ளது. நேற்று வரை இரு அணைகளில் இருந்தும் காவிரியில் திறந்து விடும் நீரின் அளவு 3,179 கன அடி ஆக இருந்தது.
இந்நிலையில் தற்போது அணைகளின் நீர் திறப்பு 2,592 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. அணைகளில் நீர்வரத்து அதிகரித்தும் காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவை குறைத்துள்ளது.