< Back
தேசிய செய்திகள்
பாஜக ஆட்சியில் பழங்குடியின சகோதர சகோதரிகள் மீதான வன்கொடுமைகள் அதிகரிப்பு - ராகுல் காந்தி குற்றச்சாட்டு

கோப்புப்படம்

தேசிய செய்திகள்

பாஜக ஆட்சியில் பழங்குடியின சகோதர சகோதரிகள் மீதான வன்கொடுமைகள் அதிகரிப்பு - ராகுல் காந்தி குற்றச்சாட்டு

தினத்தந்தி
|
5 July 2023 1:32 PM IST

பாஜக ஆட்சியில் பழங்குடியின சகோதர சகோதரிகள் மீதான வன்கொடுமைகள் அதிகரித்து வருவதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்

புதுடெல்லி,

மத்திய பிரதேச மாநிலம் சித்தி தொகுதியின் பாஜக எம்எல்ஏ கேதார் நாத் சுக்லாவின் பிரதிநிதியான பிரவேஷ் சுக்லா என்பவர் மதுபோதையில், மனநலம் பாதிக்கப்பட்ட பழங்குடியின இளைஞர் மீது சிறுநீர் கழித்துள்ளார். இதுதொடர்பான வீடியோ வெளியாகி அதிர்வலையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் பாஜக ஆட்சியில் பழங்குடியின சகோதர சகோதரிகள் மீதான வன்கொடுமைகள் அதிகரித்து வருவதாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், "பாஜக ஆட்சியில் பழங்குடியின சகோதர சகோதரிகள் மீதான வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. மத்திய பிரதேசத்தில் பாஜக தலைவர் ஒருவரின் மனிதாபிமானமற்ற குற்ற செயலால் ஒட்டுமொத்த மனித குலமே அவமானமடைந்துள்ளது. பழங்குடியினர் மற்றும் தலித்துகள் மீதான பாஜகவின் வெறுப்பின் கேவலமான முகமும் உண்மையான குணமும் இதுதான்!" என்று அதில் ராகுல் காந்தி இந்தியில் பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்