< Back
தேசிய செய்திகள்
இதுவரை 3 கோடி வருமான வரி கணக்குகள் தாக்கல்

கோப்புப்படம்

தேசிய செய்திகள்

இதுவரை 3 கோடி வருமான வரி கணக்குகள் தாக்கல்

தினத்தந்தி
|
20 July 2023 4:49 AM IST

கடந்த நிதி ஆண்டுக்கான வருமான வரி கணக்குகள் தாக்கல் செய்ய இம்மாதம் 31-ந் தேதி கடைசிநாள் ஆகும்.

புதுடெல்லி,

கடந்த நிதி ஆண்டுக்கான வருமான வரி கணக்குகள் தாக்கல் செய்ய இம்மாதம் 31-ந் தேதி கடைசிநாள் ஆகும். இந்த நிலையில், கடந்த 18-ந் தேதி வரை 3 கோடியே 6 லட்சம் வருமான வரி கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

அவற்றில் 2 கோடியே 81 லட்சம் கணக்குகள், அதாவது 91 சதவீத கணக்குகள் ஆன்லைனில் சரிபார்க்கப்பட்டுள்ளன. சரிபார்க்கப்பட்ட கணக்குகளில் 1 கோடியே 50 லட்சத்துக்கு மேற்பட்ட கணக்குகள் தணிக்கை செய்யப்பட்டுள்ளன. இத்தகவலை வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

3 கோடி கணக்குகள் தாக்கல் என்ற சாதனை, கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், 7 நாட்கள் முன்பே எட்டப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்