< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
தொடர் மழை: இடுக்கி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
|8 Aug 2022 8:28 AM IST
தொடர் கனமழை காரணமாக இடுக்கியில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இடுக்கி,
கேரளாவில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. அனைத்து மாவட்டங்களிலும் தொடர்ந்து மழை பெய்து வந்ததால், பெரும்பாலான அணைகள் வேகமாக நிரம்பியுள்ளன.
இடுக்கி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கடந்த 5-ந்தேதி மூணாறு அருகே உள்ள குண்டலை புதுக்கடி என்னுமிடத்தில் திடீரென்று நிலச்சரிவு ஏற்பட்டது. அங்கு மலை உச்சியில் மண், கற்கள் உருண்டு வந்து விழுந்ததில் கோவில், 2 கடைகள் மற்றும் ஒரு ஆட்டோ மண்ணுக்குள் புதைந்தன. இதனையடுத்து சீரமைப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இந்நிலையில், தொடர்ந்து கனமழை பெய்து வருவதன் காரணமாக கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (8.8.2022) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் ஜீபா ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார்.