< Back
தேசிய செய்திகள்
விராஜ்பேட்டையில் கஞ்சா பயன்படுத்திய 4 பேர் கைது
தேசிய செய்திகள்

விராஜ்பேட்டையில் கஞ்சா பயன்படுத்திய 4 பேர் கைது

தினத்தந்தி
|
24 Aug 2023 12:15 AM IST

விராஜ்பேட்டையில் கஞ்சா பயன்படுத்திய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

குடகு :-

குடகு மாவட்டம் விராஜ்பேட்டை தாலுகா நாபொக்லு போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் இளைஞர்கள் பலர் கஞ்சா பயன்படுத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் 4 பேர் கஞ்சா போதையில் சுற்றி திரிந்தனர். அவர்களை மடக்கி பிடித்த போலீசார் நாபொக்லு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் விராஜ்பேட்டையை சேர்ந்த அஸ்ரப், குருளி கிராமத்தை சேர்ந்த ஹசினார், பசீர், ஹக்கீம் என்று தெரியவந்தது.

இவர்கள் போதைப்பொருள் விற்பனை கும்பலிடம் இருந்து கஞ்சாைவ வாங்கி பயன்படுத்தியது தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் கைது செய்த போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு ெசய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்