விராஜ்பேட்டையில் மரங்களை வெட்டி கடத்த முயன்ற 3 பேர் கைது
|விராஜ்பேட்டையில் மரங்களை வெட்டி கடத்த முயன்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
குடகு;
குடகு மாவட்டம் விராஜ்பேட்டை தாலுகா அம்ருதகும்பேரா கிராமத்தை சேர்ந்தவர் முத்தப்பா. இவரது தோட்டத்தில் பலாமரங்கள் உள்ளது. இதில் 2 மரங்களை மர்மநபர்கள் வெட்டி கடத்த முயற்சி நடப்பதாக வனத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் மரங்களை வெட்டி கடத்த முயன்ற 3 பேரை சுற்றி வளைத்தனர். அவர்கள் அனைவரும் வனத்துறை அதிகாரிகளை பார்த்ததும் தப்பியோட முயற்சித்தனர். ஆனாலும் அவர்கள் 3 பேரையும் வனத்துறையினர் பிடித்து கைது செய்தனர்.
விசாரணையில் அவர்கள் நெலகூதேரஹள்ளிைய சேர்ந்த ரஷீத், ஹசினார், ஆனந்த்பூர் கிராமத்தை சேர்ந்த சரண்ராஜ் என்பது தெரியவந்தது. இவர்களிடம் இருந்து ரூ.2 லட்சம் மதிப்பிலான மரக்கட்டைகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். இது குறித்து விராஜ்பேட்டை வனத்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்துள்ளனர்.