< Back
தேசிய செய்திகள்
உடுப்பியில் கடல் அலையில் சிக்கி தொழிலாளி சாவு
தேசிய செய்திகள்

உடுப்பியில் கடல் அலையில் சிக்கி தொழிலாளி சாவு

தினத்தந்தி
|
20 July 2023 12:15 AM IST

செல்பி எடுக்க முயன்றபோது கடல் அலையில் சிக்கி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

மங்களூரு-

கதக் மாவட்டத்தை சேர்ந்தவர் பீர் சாஹேப் (வயது 21), கூலி தொழிலாளி. இவர் உடுப்பி மாவட்டம் காபு தாலுகா முத்ரங்கடியில் தங்கியிருந்து வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று இவரை பார்ப்பதற்காக கதக்கில் இருந்து சிராஜ் என்ற வாலிபர் வந்திருந்தார்.

இதையடுத்து 2 பேரும் குந்தாபுராவை அடுத்த திராசி கடற்கரைக்கு குளிப்பதற்காக சென்றனர். அப்போது பீர் சாஹேப், கடலில் இறங்கி செல்பி எடுக்க முயன்றனர். அந்தநேரம் கடல் சீற்றம் அதிகரித்து காணப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் கடல் அலையில் இழுத்து செல்லப்பட்ட பீர் சாஹேப் நீரில் மூழ்கி உயிரிழந்தார். இதை பார்த்த நண்பர் சிராஜ் உடனே கங்கொல்லி போலீசாருக்கு தகவல் அளித்தார்.

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், தீயணைப்பு படையினர் உதவியுடன் பீர் சாஹேப்பின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கங்கொல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்