< Back
தேசிய செய்திகள்
உடுப்பியில் மாட்டிறைச்சி விற்ற 3 பேர் கைது
தேசிய செய்திகள்

உடுப்பியில் மாட்டிறைச்சி விற்ற 3 பேர் கைது

தினத்தந்தி
|
11 Oct 2022 12:15 AM IST

உடுப்பியில் மாட்டிறைச்சி விற்ற 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மங்களூரு;


உடுப்பி டவுன் பெலாப்பு கிராமத்தில் சட்டவிரோதமாக மாட்டிறைச்சி விற்பனை நடைபெறுவதாக சிா்வா போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் போில் இன்ஸ்பெக்டர் ராகவேந்திரா மற்றும் குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் ஆகியோர் தலைமையிலான போலீசார் அந்த பகுதிக்கு விரைந்து சென்றனர்.

பின்னர் அந்த பகுதியில் சந்தேகப்படும் படியான வீடுகளில் போலீசார் அதிரடியாக சோதனை செய்தனர். அந்த சோதனையில் அதே பகுதியை சேர்ந்த தப்ரேஸ் (வயது 30) என்பவர் கூடாரம் அமைத்து மாட்டிறைச்சி விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

மேலும் அவருடன் சோ்ந்து மாட்டிறைச்சி விற்பனையில் ஈடுபட்ட அதே பகுதியை சேர்ந்த முகமது ஹாஜிம் (39) மற்றும் முகமது வாலித் (20) ஆகியோரையும் கைது செய்தனர். இதையடுத்து போலீசார் அங்கிருந்து விற்பனைக்காக வைத்திருந்த மாட்டிறைச்சி, 3 இருச்சக்கர வாகனங்கள் மற்றும் இறைச்சி வெட்ட பயன்படுத்திய பொருட்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் அங்கிருந்து கன்றுக்குட்டி ஒன்றையும் மீட்டு உடுப்பியில் உள்ள கோசாலையில் விட்டனர். அவர்கள் 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்