உடுப்பியில், பல்வேறு இடங்களில் போதைப்பொருள் பயன்படுத்திய 8 பேர் பிடிபட்டனர்
|உடுப்பியில், பல்வேறு இடங்களில் போதைப்பொருள் பயன்படுத்திய 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
மங்களூரு;
போதைப்பொருள் நடமாட்டம்
உடுப்பியில் போதைப்பொருள் நடமாட்டத்தை தடுக்க மாவட்ட போலீஸ் தொடர்ந்து தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.இந்த நிலையில் குந்தாப்புரா புறநகர் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் பவன்குமார் தலைமையிலான போலீசார் கஞ்சா புகைத்ததாக ராகவேந்திர ஆச்சார்யா(வயது 30) என்பவரை கைது செய்தனர். மருத்துவ பரிசோதனையில் அவர், கஞ்சா புகைத்தது உறுதி செய்யப்பட்டது.
இதேபோல் ஹெஜமாடி டோல்கேட் அருகே போதைப்பொருள் பயன்படுத்தியதாக ஹெஜாமடிகுந்தியை சேர்ந்த பிரஜ்வல் ஆச்சார்யா என்பவர் கைது செய்யப்பட்டார்.ஷிரூர் கடற்கரையில்பைந்தூர் போலீசார் நடத்திய சோதனையில் கஞ்சா புகைத்ததாக சரத் பூஜாரியை(30) கைது செய்தனர்.
மேலும் சோமேஸ்வரா கடற்கரையில் அமர்ந்து கஞ்சா புகைத்ததாக வித்யாதர்(19) என்பவரையும் பைந்தூர் போலீசார் கைது செய்தனர். கார்காலா டவுன் போலீசார் கசபா அருகே பங்களாகுடே பரணீரு மைதானத்தில் கஞ்சா பயன்படுத்தியதாக ஒருவரை கைது செய்தனர். மேலும் கங்கொல்லி போலீசார் கொர்லஹள்ளி அருகே கஞ்சா பயன்படுத்தியதாக முகமது ரிஹாத் சதா, முகமது டேனிஷ் மற்றும் முகமது அர்பாஸ் ஆகியோரை கைது செய்தனர்.
8 பேர் கைது
இதன்மூலம் உடுப்பியில், பல்வேறு இடங்களில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக 8 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை பறிமுதல் செய்தனர். கைதானவர்கள் மீது அந்தந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.