< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த சிறிது நேரத்தில் மழை - கிராம மக்கள் மகிழ்ச்சி
|27 Jun 2022 7:21 PM IST
கர்நாடகா மாநிலத்தில் மழை பெய்ய வேண்டி கிராமத்தினர் கழுதைக்கு திருமணம் செய்து வைத்தனர்.
கர்நாடகா:
வடகர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. ஆனால் விஜயநகர் மாவட்டத்தில் இன்னும் எதிர்பார்த்த அளவுக்கு மழை பெய்யவில்லை. இதனால் மழை வேண்டி அரப்பனஹள்ளி தாலுகா கோனகேரி கிராமத்தை சேர்ந்த மக்கள் 2 கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்தனர். அந்த கிராமத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் வைத்து கழுதைகளுக்கு திருமணம் நடந்தது.
திருமணத்தின் போது 2 கழுதைகளுக்கும் மாலை அணியப்பட்டு இருந்தது. மஞ்சள், குங்குமம் வைக்கப்பட்டது. புத்தாடை அணியப்பட்டது. திருமணத்திற்கு பின்னர் கழுதைகளை கிராம மக்கள் ஊர்வலமாக அழைத்து வந்தனர். அப்போது திடீரென கிராமத்தில் மழை பெய்தது. இதனால் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.