< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மத்திய இணை மந்திரி எல். முருகன் மாலை அணிவித்து மரியாதை
|30 Oct 2022 7:42 PM IST
நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மத்திய இணை மந்திரி எல். முருகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
புதுடெல்லி,
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா இன்று (30.10.2022) நடைபெற்றது. இதையொட்டி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மத்திய தகவல், ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை மந்திரி டாக்டர் எல். முருகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ராஜுபிஸ்தா மற்றும் தில்லிவாழ் தமிழ் மக்கள் இந்நிகழ்வில் பங்கேற்று மரியாதை செலுத்தினர்.இந்திய தேசத்திற்குத் திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஆற்றிய தலைசிறந்த பங்களிப்பைப் போற்றும் விதமாக அவருக்கு நாடாளுமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதாக மத்திய இணை மந்திரி டாக்டர் எல். முருகன் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.