< Back
தேசிய செய்திகள்
அந்தரத்தில், கயிற்றின் மேல்... சேலை கட்டியபடி சைக்கிள் ஓட்டி அசத்திய பெண்
தேசிய செய்திகள்

அந்தரத்தில், கயிற்றின் மேல்... சேலை கட்டியபடி சைக்கிள் ஓட்டி அசத்திய பெண்

தினத்தந்தி
|
15 Feb 2023 4:27 PM IST

சாகசம் செய்வதற்கு வயது ஒரு தடையல்ல என நிரூபிக்கும் வகையில் சேலை கட்டியபடி அந்தரத்தில் பெண் ஒருவர் சைக்கிள் ஓட்டி சென்றுள்ளார்.



புதுடெல்லி,


சமூக ஊடகங்களில் நமக்கு உற்சாகம் தரும், நகைச்சுவையான மற்றும் நல்ல விசயங்கள் அடங்கிய வீடியோக்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், சாகசம் செய்வதற்கு வயது ஒரு தடையல்ல என நிரூபிக்கும் வகையில் சேலை கட்டியபடி அந்தரத்தில் பெண் ஒருவர் சைக்கிள் ஓட்டி சென்றுள்ளார்.

67 வயது உடைய அந்த பெண் மஞ்சள் நிற சேலையில், ஹெல்மெட் அணிந்தபடி காணப்படுகிறார். தரையில் இருந்து சற்று உயரத்தில், கயிற்றின் மேல் அந்தரத்தில் காற்றின் ஊடே அவர் சைக்கிளை ஓட்டி செல்கிறார்.

இந்த வீடியோவை ஷைனூ என்பவர் வெளியிட்டு உள்ளார். அந்த பதிவில், நான் பயப்படவில்லை மகனே. நான் சைக்கிளை ஓட்டுவேன். நீ வேண்டுமென்றால் என்னுடன் வா என அவர் கூறினார்.

67 வயதில் தனது ஆசையை நிறைவேற்றி கொள்ள அந்த பெண் எங்களிடம் வந்தபோது, அதனை நாங்கள் பூர்த்தி செய்து வைத்தோம் என ஷைனூ தெரிவித்து உள்ளார்.


மேலும் செய்திகள்