தொழிலாளியை கொல்ல முயன்ற வழக்கில் பெண்கள் உள்பட மூவருக்கு தலா 3 ஆண்டு சிறை
|தொழிலாளியை கொல்ல முயன்ற வழக்கில் பெண்கள் உள்பட மூவருக்கு தலா 3 ஆண்டு சிறை விதித்து மங்களூரு கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது.
மங்களூரு;
தட்சிண கன்னடா மாவட்டம் மூடபித்ரி தாலுகா நிடோடி அருேக கொண்டட்கா கிராமத்தை சோ்ந்தவர் வசந்த்ராஜா ெஷட்டி. தொழிலாளி. இவருக்கும் அதே பகுதியை சோ்ந்த பிரசன்னகுமார் என்பவருக்கும் இடையே நில தகராறு இருந்து வந்தது. இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த பிரசன்னகுமார் தனது குடும்பத்தினர் ஜெயந்தி சுவர்ணா, ரக்ஷா சுவர்ணா ஆகியோருடன் சோ்ந்து கடந்த 2020-ம் ஆண்டு வசந்த்ராஜாவின் வீடு புகுந்து அவரை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்றனர். இதுகுறித்து மூடபித்ரி போலீசார் வழக்குப்பதிவு ெசய்து பிரசன்னகுமார், ஜெயந்தி, ரக்ஷா ஆகியோரை கைது செய்தனர்.
இதுதொடர்பான வழக்கு மங்களூருவில் உள்ள மாவட்ட கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கின் விசாரணை முடிவடைந்து நேற்றுமுன்தினம் நீதிபதி பி.பி.ஜகாதி தீர்ப்பு வழங்கினார். அதில் 3 பேர் மீதான குற்றச்சாட்டும் நிரூபணமாகி உள்ளதால் அவர்களுக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.2,500 அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.