சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை
|சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோலார் கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது.
கோலார் தங்கவயல்;
சிறுமி பலாத்காரம்
கோலார் மாவட்டம் தங்கவயல் தாலுகா ஆண்டர்சன்பேட்டை போலீஸ் எல்லைக்கு உட்பட்ட ேகசம்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் கண்ணப்பா. தொழிலாளி. அதே பகுதியில் சிறுமி ஒருவள் தனது பெற்றோருடன் வசித்து வருகிறாள். இந்த நிலையில் கண்ணப்பா கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 3-ந்தேதி அந்த சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.
பின்னர் சிறுமியின் வாயில் துணியை வைத்து அமுக்கி வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார். மேலும் இதுகுறித்து யாரிடமாவது கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளார்.
போக்சோவில் கைது
இதுகுறித்து அந்த சிறுமி, தனது பெற்றோரிடம் நடந்த சம்பவத்தை கதறி அழுதபடி கூறியுள்ளாள். இதைகேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்ேறார், உடனே இதுகுறித்து ஆண்டர்சன்பேட்டை போலீசில் புகார் அளித்தார்.
அந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்ணப்பாவை போக்சோவில் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.இதையடுத்து அவர் ஜாமீனில் வெளியே வந்தார். இதுதொடர்பான வழக்கு விசாரணை கோலார் கோர்ட்டில் நடத்து வந்தது.
20 ஆண்டு சிறை
இதுதொடா்பாக ஆண்டர்சன்பேட்டை போலீசார் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்து இருந்தனர். இந்த நிலையில் வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதி தேவமானே தீர்ப்பு வழங்கினார்.
அதில் கண்ணப்பா மீதான குற்றச்சாட்டு நிரூபணமாகி உள்ளதால் அவருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.21 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.