இளம்பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில் வாலிபருக்கு 10 ஆண்டு சிறை
|இளம்பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில் வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து மங்களூரு கோர்ட்டு தீர்ப்பளித்தது.
மங்களூரு-
இளம்பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில் வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து மங்களூரு கோர்ட்டு தீர்ப்பளித்தது.
கூலித்தொழிலாளி
தட்சிண கன்னடா மாவட்டம் பண்ட்வால் தாலுகா பெருவாய் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேஷ்ராய் (வயது 33). இவர் அப்பகுதியில் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்தநிலையில், 19 வயது இளம்பெண் அப்பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த இளம் பெண்ணுக்கு எண்டோசல்பான் நோய் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் ராஜேஷ்ராய், இளம்பெண்ணின் தந்தையிடம் வேலை கேட்டு வந்துள்ளார். இதனால் அவரது வீட்டிற்கு ராஜேஷ்ராய் அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது அவருக்கும், இளம்பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.
இது நாளடைவில் காதலாக மாறியது. இந்தநிலையில், கடந்த 2015-ம் ஆண்டு இளம்பெண்ணின் பெற்றோர் அருகில் உள்ள தோட்டத்திற்கு சென்றனர். வீட்டில் இளம்பெண் மட்டும் தனியாக இருந்தார்.
பாலியல் பலாத்காரம்
அப்போது வீட்டிற்கு வந்த ராஜேஷ்ராய் இளம்பெண்ணிடம் ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் இதுகுறித்து ெவளியே யாரிடமும் கூறினால் கொலை செய்து விடுவதாக இளம்பெண்ைண ராஜேஷ்ராய் மிரட்டி உள்ளார். ஆனாலும் இளம்பெண், தனக்கு நடந்த கொடுமையை பெற்றோரிடம் கூறி இளம்பெண் கதறி அழுதுள்ளார்.
இதனை கேட்ட பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அவர்கள் விட்டலா போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேஷ்ராயை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
10 ஆண்டு சிறை
பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார். இதுதொடர்பான வழக்கு மங்களூரு 2-வது கூடுதல் விரைவு கோர்ட்டில் நடந்து வந்தது. விட்டலா போலீசார் கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்த வழக்கின் விசாரணை நிறைவு பெற்றதை தொடர்ந்து நீதிபதி பிரீத்தி தீர்ப்பு கூறினார்.
அதில், இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் ராஜேஷ்ராயிக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்தார்.
அபராத தொகையை செலுத்த தவறினால் மேலும் 3 மாதம் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.