< Back
தேசிய செய்திகள்
மனைவியை கொன்ற வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை
தேசிய செய்திகள்

மனைவியை கொன்ற வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை

தினத்தந்தி
|
13 Sept 2023 12:15 AM IST

மனைவியை கொன்ற வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து தார்வார் கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது.

உப்பள்ளி-

மனைவியை கொன்ற வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து தார்வார் கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது.

பெண் கொலை

தார்வார் டவுன் ராஜீவ்காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் கணேஷ் (வயது 30). கூலி தொழிலாளி. இவரது மனைவி ஷில்பா. இவர்களுக்கு கடந்த 2019-ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த புதிதில் இருவரும் சந்தோஷமாக வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் கணேசுக்கும் அதேப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த ஷில்பா, கணேசை கண்டித்துள்ளார்.

ஆனாலும் கணேஷ் கள்ளத்தொடர்பை கைவிடவில்லை என தெரிகிறது. இதனால் கள்ளத்தொடர்பு விவகாரம் காரணமாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு மே மாதம் 2-ந்தேதி மீண்டும் கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த கணேஷ், வீட்டில் இருந்த மண்வெட்டியை எடுத்து மனைவி ஷில்பாவை சரமாரியாக வெட்டினார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

ஆயுள் தண்டனை

இதுகுறித்து தார்வார் வித்யாகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து கணேசை கைது செய்தனர். விசாரணைக்கு பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் தார்வார் கோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு தார்வார் கோர்ட்டில் நடந்து வந்தது. வித்யாகிரி போலீசார் இந்த கொலை தொடர்பாக கோர்ட்டில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்து நேற்று முன்தினம் நீதிபதி கங்காதர் தீர்ப்பு வழங்கினார். அப்போது கணேஷ் மீதான குற்றச்சாட்டு ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்