பெண்ணை தாக்கிய வழக்கில் தொழிலாளிக்கு 2½ ஆண்டு சிறை
|பெண்ணை தாக்கிய வழக்கில் தொழிலாளிக்கு 2½ ஆண்டு சிறை தண்டனை விதித்து சிவமொக்கா கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
சிவமொக்கா-
பெண்ணை தாக்கிய வழக்கில் தொழிலாளிக்கு 2½ ஆண்டு சிறை தண்டனை விதித்து சிவமொக்கா கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
தூய்மை பணியாளர்
சிவமொக்கா (மாவட்டம்) தாலுகா வினோபா நகர் ஏ.பி.எம்.சி. யார்டு பகுதியில் கடந்த 2019-ம் ஆண்டு 33 வயது பெண் தூய்மை பணியாளர் வேலை செய்து கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக சந்தரப்பா (வயது 55) என்பவர் வந்தார். அவர் அங்கு தூய்மை பணியில் ஈடுபட்டு இருந்த பெண்ணின் கையை பிடித்து இழுத்துள்ளார். அப்பெண்ணின் ஜாதி பெயரை சொல்லி தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார்.
மேலும் அந்த பெண்ைண சந்தரப்பா தாக்கி உள்ளார். இதில் படுகாயம் அடைந்த பெண்ணை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து அந்த பெண் வினோபா நகர் ேபாலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்ேபரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தரப்பாவை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பின்பு அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.
2½ ஆண்டு சிறை
இதுதொடர்பான வழக்கு சிவமொக்கா மாவட்ட கூடுதல் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வினோபா நகர் போலீசார் கோர்ட்டில் குற்றபத்திரிகை தாக்கல் செய்தனர். இந்த வழக்கின் விசாரணை நிறைவு பெற்றதை தொடர்ந்து நீதிபதி பி.ஆர்.பல்லவி நேற்று முன்தினம் தீர்ப்பு கூறினார்.
அதில் பெண்ணை தாக்கிய வழக்கில் சந்தரப்பாவுக்கு 2½ ஆண்டு சிறை தண்டனையும், ரூ.30 ஆயிரம் அபராதமும் விதித்தார். அபராத தொகையை செலுத்த தவறினால் மேலும் 5 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.