< Back
தேசிய செய்திகள்
சிருங்கேரி சாரதாம்மாள் கோவிலில்  ஆர்.எஸ்.எஸ். தலைவர் சாமி தரிசனம்
தேசிய செய்திகள்

சிருங்கேரி சாரதாம்மாள் கோவிலில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் சாமி தரிசனம்

தினத்தந்தி
|
6 Oct 2023 12:15 AM IST

சிருங்கேரி சாரதாம்மாள் கோவிலில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் சாமி தரிசனம் செய்தார்.

சிக்கமகளூரு-

சிக்கமகளூரு மாவட்டம் சிருங்கேரியில் பிரசித்தி பெற்ற சாரதாம்மாள் கோவில் உள்ளது. இ்ந்த கோவிலுக்கு கர்நாடகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இ்ருந்தும் ஏராளமானோர் தினந்தோறும் வந்து செல்கிறார்கள். இந்தநிலையில் நேற்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் சிருங்கேரி சாரதாம்மாள் கோவிலுக்கு வந்தார்.

அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் மரியாதை அளிக்கப்பட்டது. இதையடுத்து மோகன் பகவத் சாரதாம்மாளை தரிசனம் செய்தார். அங்கு சிறிது நேரம் அவர் அமர்ந்து இருந்தார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் நந்தவனம் மடத்திற்கு மோகன் பகவத் சென்றார்.

அங்கு மடாதிபதி பாரதியதீர்த சங்கராச்சாரியார், இளைய மடாதிபதி விது சேகரா ஆகியோரிடம் மோகன் பகவத் ஆசீர்வாதம் பெற்றார். மடாதிபதிகளுடன் அவர் 2 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

பின்னர் அங்கிருந்து மோகன் பகவத் காரில் புறப்பட்டு சென்றார். அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு மடாதிபதிகளுக்கு அழைப்பு விடுக்க அவர் வந்ததாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்