< Back
தேசிய செய்திகள்
சிவமொக்காவில்மதுக்கடை திறப்பதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
தேசிய செய்திகள்

சிவமொக்காவில்மதுக்கடை திறப்பதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

தினத்தந்தி
|
23 Aug 2023 12:15 AM IST

சிவமொக்காவில் மதுக்கடை திறப்பதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் ஈடுபட்டனர்.

சிவமொக்கா;

சிவமொக்கா (மாவட்டம்) டவுன் மாதாரி பாளையா பகுதியில் புதிதாக மதுபானக்கடை திறக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதுகுறித்து மாதாரி பாளையா பகுதி மக்கள் மதுபானக்கடை திறக்க அனுமதிக்க கூடாது என அதிகாரிகளிடம் மனு அளித்தனர்.

அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்தநிலையில் புதிய மதுபானக்கடை திறப்பதை கண்டித்து நேற்று முன்தினம் மாலை மாதாரி பாளையா பகுதியில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறுகையில், மாதாரி பாளையா பகுதியில் புதிய மதுபானக்கடை அமைய ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

இதுகுறித்து அதிகாரியிடம் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளோம். மதுபானக்கடை திறக்கப்படும் பகுதியில் பள்ளி, கோவில், தர்கா உள்ளது. எனவே அங்கு மதுபானக்கடை திறக்ககூடாது என்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த சிவமொக்கா டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்