< Back
தேசிய செய்திகள்
சிவமொக்காவில், கனமழையால் 782 ஹெக்டேர் விளைநிலங்கள் சேதம்
தேசிய செய்திகள்

சிவமொக்காவில், கனமழையால் 782 ஹெக்டேர் விளைநிலங்கள் சேதம்

தினத்தந்தி
|
13 July 2022 3:16 PM GMT

சிவமொக்காவில், கனமழையால் 782 ஹெக்டேர் விளைநிலங்கள் சேதமடைந்துள்ளது.

சிவமொக்கா;

10 நாட்களாக கனமழை

கர்நாடகத்தின் கடலோர மற்றும் மலைநாடு மாவட்டங்களில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடகத்தில் உள்ள அணைகள் நிரம்பி, ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கனமழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் சிவமொக்கா மாவட்டத்தில் கனமழைக்கு இதுவரை 90-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளது. 782 ஹெக்டேர் விளைநிலங்கள் சேதமடைந்து பயிர்கள் நாசமாகி உள்ளது. சுமார் 200 வீடுகள் மழையால் இடிந்து விழும் தருவாயில் உள்ளன.

சிவமொக்கா மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த கனமழைக்கு, சாகர் தாலுகா பீசனகத்தே கிராமத்தில் வீடுகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

மேலும், மீட்பு படையினர் அவர்களை படகுகள் மூலம் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதிகாரிகள் ஆய்வு

சாகர் தாலுகா அதிகாரிகள் மழை பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்து, பொதுமக்களுக்கு வேண்டிய உதவிகளை செய்து வருகின்றனர்.

இதேபோல் தடகளலே, சைதூர், கேஜி கொப்பா, கனசே மண்டகளலே போன்ற கிராமங்களில் 3 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட விளைநிலங்கள் தண்ணீரில் மழைநீரால் சேதமடைந்துள்ளது.

மேலும் செய்திகள்