சாலை விபத்துகளில் 3 பேர் படுகாயம்
|புத்தூரில் ஏற்பட்ட சாலை விபத்துகளில் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
மங்களூரு;
தட்சிண கன்னடா மாவட்டம் புத்தூர் தாலுகா உப்பினங்கடி அருகே ராமகுஞ்சா பகுதியை சேர்ந்தவர்கள் சர்மா(வயது 32) மற்றும் ஓம்கார் பிரசாத் (30). இவர்கள் 2 பேரும் நேற்றுமுன்தினம் சக்லேஷ்புராவுக்கு வேலைக்கு சென்று விட்டு காரில் வீட்டிற்கு வந்துகொண்டிருந்தனர்.
சிராடி அருகே அட்டஹோளே என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த அரசு பஸ்சும், காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் இருந்த 2 பேரும் படுகாயம் அடைந்தனர்.
அவர்களை, அருகில் இருந்தவர்கள் உடனடியாக மீட்டு புத்தூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சோ்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதேபோல் அதே இடத்தில் நேற்று காரும், மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துள்ளானது.
இதில் மோட்டார் சைக்கிளில் வந்த ெபங்களூருவை சேர்ந்த பரத் (24) என்பவர் படுகாயம் அடைந்து புத்தூர் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்துகள் குறித்து புத்தூர் போலீசார் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.