< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
புதுச்சேரியில் இன்று 37 அரசு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்தது பள்ளிக்கல்வித்துறை
|10 Feb 2023 7:35 AM IST
முத்து மாரியம்மன் கோயில் செடல் திருவிழாவை முன்னிட்டு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
புதுச்சேரி,
புதுச்சேரி கதிர்காமத்தில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் செடல் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவை காண புதுவையில் இருந்து மட்டுமல்ல தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களிலும் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிகின்றனர்.
இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான செடல் திருவிழா கடந்த 2ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த விழாவின் முக்கிய நிகழ்வான செடல் திருவிழா இன்று விமர்சையாக நடைபெற உள்ளது.
இந்த செடல் திருவிழாவை முன்னிட்டு இன்று புதுவையில் உள்ள 37 அரசு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.