< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
இந்துக்களுக்கு சிறுபான்மை அந்தஸ்து மறுக்கப்படுவதற்கான ஆதாரங்கள் வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டு
|18 July 2022 7:12 PM IST
மாநில வாரியாக சிறுபான்மையினருக்கான அந்தஸ்து அளிக்க வேண்டும் என தொடரப்பட்ட வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு பதிலளித்துள்ளது.
புதுடெல்லி,
மாநில வாரியாக சிறுபான்மையினருக்கான அந்தஸ்து அளிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், மிசோரம் அல்லது காஷ்மீர் மாநிலங்களில் இந்துக்களுக்கு சிறுபான்மை அந்தஸ்து மறுக்கப்படுவதாக வலுவான ஆதாரங்கள் இருந்தால் மட்டுமே இதை கவனத்தில் எடுத்துக்கொள்ள முடியும்" என தெரிவித்தார். இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை இரண்டு வாரங்களுக்கு பிறகு நடைபெற உள்ளது.