< Back
தேசிய செய்திகள்
மைசூருவில் மழை பாதித்த பகுதிகளில் மந்திரி எஸ்.டி.சோமசேகர் ஆய்வு
தேசிய செய்திகள்

மைசூருவில் மழை பாதித்த பகுதிகளில் மந்திரி எஸ்.டி.சோமசேகர் ஆய்வு

தினத்தந்தி
|
29 Aug 2022 9:13 PM IST

மைசூருவில் மழை பாதித்த பகுதிகளில் மந்திரி எஸ்.டி.சோமசேகர் ஆய்வு செய்தார்.

மைசூரு;


மைசூரு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழைக்கு வீடுகள், விளைநிலங்கள் சேதம் அடைந்துள்ளது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் புகுந்துள்ளது. சாலையோரம் மரங்கள், மின்கம்பங்கள் முறிந்து விழுந்து உள்ளது.

இந்த நிலையில் மாநில கூட்டுறவுத்துறை மந்திரியும், மைசூரு மாவட்ட பொறுப்பு மந்திரியான எஸ்.டி.சோமசேகர் மழை பாதித்த பகுதிகளில் அதிகாரிகளுடன் நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.

பின்னர் அவர், மழையால் பாதித்த மக்களை சந்தித்து ஆறுதல் கூறி விரைவில் நிவாரணம் பெற்று தருவதாக உறுதியளித்தார்.

மேலும் செய்திகள்