< Back
தேசிய செய்திகள்
மைசூருவில், வேறொருவரின் வீட்டை  முதியவரிடம் குத்தகைக்கு விடுத்து ரூ.12 லட்சம் மோசடி  பெண்கள் உள்பட 3 பேருக்கு வலைவீச்சு
தேசிய செய்திகள்

மைசூருவில், வேறொருவரின் வீட்டை முதியவரிடம் குத்தகைக்கு விடுத்து ரூ.12 லட்சம் மோசடி பெண்கள் உள்பட 3 பேருக்கு வலைவீச்சு

தினத்தந்தி
|
16 Sept 2022 12:15 AM IST

மைசூருவில், வேறொருவரின் வீட்டை முதியவருக்கு குத்தகைக்கு விடுத்து ரூ.12 லட்சம் மோசடி செய்த பெண்கள் உள்பட 3 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

மைசூரு:

வேறொருவரின் வீட்டை குத்தகைக்கு விடுவதாக...

மைசூருவில், வேறொருவரின் வீட்டை முதியவருக்கு குத்தகைக்கு விடுத்து ரூ.12 லட்சம் மோசடி செய்த பெண்கள் உள்பட 3 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள். மைசூரு டவுன் மஞ்ச்சேகவுண்டன கொப்பலு கிராமத்தை சேர்ந்தவர் சூரியநாராயணாச்சார்(வயது 60).

இவர், அப்பகுதியில் குத்தகைக்கு வீடு தேடி வந்தார். இதையறிந்த எலிசா, புஷ்பா மற்றும் சந்துரு ஆகிய 3 பேர், சூரிய நாராயணாச்சாரை தொடர்பு கொண்டு பேசினர். அப்போது அவர்கள், சூரியநாராயணாச்சாரிடம் மைசூரு கோகுலம் பகுதி 1-வது ஸ்டேஜ் 2-வது கிராஸ் பகுதியில் தங்களுக்கு சொந்தமான வீட்டை குத்தகைக்கு விட உள்ளதாகவும், ரூ.12 லட்சம் கொடுத்து குத்தகைக்கு எடுத்துகொள்ளும்படி தெரிவித்துள்ளனர். இதற்கு சூரிய நாராயணாச்சாரும் சம்மதம் தெரிவித்துள்ளார்.

அதன்படி சில நாட்கள் கழித்து வீட்டிற்கான ஆவணங்களை காண்பித்து சூரிய நாராயணாச்சாரிடம் ரூ.12 லட்சத்தை வாங்கிக்கொண்டனர். மேலும் அந்த வீட்டில் ஒரு குடும்பம் வாடகைக்கு இருந்து வருவதாகவும், சில நாட்களில் அவர்கள் வேறு இடத்திற்கு குடிபெயர்ந்து விடுவார்கள். அதுவரை பொறுத்து கொள்ளும்படி தெரிவித்துள்ளனர். இதற்கும் அவர் சம்மதம் தெரிவித்தார்.

ரூ.12 லட்சம் மோசடி

ஆனால் நீண்ட நாட்கள் ஆகியும் அந்த குடும்பம் வீட்டை காலி செய்யவில்லை. இதனால் சூரிய நாராயணாச்சார், அந்த குடும்பத்திடம் கேட்டுள்ளார். அப்போது அவர்கள், சூரிய நாராயணாச்சாரிடம் வீடு தங்களுக்குரியது என்று தெரிவித்து ஆவணங்களை காண்பித்துள்ளனர். அப்போது தான் அவருக்கு, 3 பேரும் தங்களுக்கு சொந்தமான வீடு என்று கூறி குத்தகைக்கு விடுவதாக தன்னிடம் ரூ.12 லட்சம் மோசடி செய்ததை உணர்ந்தார்.

இதுகுறித்து அவர், வி.வி.புரம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முதியவரிடம் மோசடியில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 3 பேரை வலைவீசி தேடிவருகின்றனர்.

மேலும் செய்திகள்