< Back
தேசிய செய்திகள்
மங்களூருவில் ஆட்டோவில்  கஞ்சா கடத்திய 3 பேர் கைது
தேசிய செய்திகள்

மங்களூருவில் ஆட்டோவில் கஞ்சா கடத்திய 3 பேர் கைது

தினத்தந்தி
|
2 Aug 2023 12:15 AM IST

மங்களூருவில் ஆட்டோவில் கஞ்சா கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

மங்களூரு-

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு நகர் பார்கே பகுதியில் போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோ ஒன்றை தடுத்து நிறுத்தினர். இதையடுத்து போலீசார் ஆட்டோவில் இருந்த 3 பேரிடமும் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகம் அடைந்த போலீசார், ஆட்டோவில் சோதனை நடத்தினர்.

அப்போது ஆட்டோவில் கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் கைது செய்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில், அவர்கள் கணேஷ் (வயது 28), அபிலாஷ் (27), ராகுல் (25) என்பதும், இவர்கள் விற்பனை செய்வதற்காக கஞ்சாவை கடத்தி வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து அவர்களிடம் இருந்து ரூ.1.36 லட்சம் மதிப்பிலான 2 கிலோ 133 கிராம் கஞ்சா மற்றும் ஒரு ஆட்டோ, 3 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து பார்கே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்