< Back
தேசிய செய்திகள்
கடந்த 10 ஆண்டுகளில் ஏழைகளின் வாழ்க்கை தரத்தை உயர்த்தி உள்ளோம் - பிரதமர் மோடி
தேசிய செய்திகள்

கடந்த 10 ஆண்டுகளில் ஏழைகளின் வாழ்க்கை தரத்தை உயர்த்தி உள்ளோம் - பிரதமர் மோடி

தினத்தந்தி
|
29 Sept 2022 1:06 PM IST

சூரத்தில் ரூ.3,400 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டங்களை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.

சூரத்,

குஜராத் மாநிலத்திற்கு இந்தாண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி இம்மாநிலத்திற்கு பல முறை வருகை தந்த பிரதமர் மோடி, பல்வேறு வளர்ச்சித்திட்டங்களை துவக்கி வைத்துள்ளார் . இந்நிலையில் 2 நாள் பயணமாக இன்று பிரதமர் மோடி குஜராத் வந்தடைந்தார். சூரத் நகரில் ரூ. 3400 கோடி மதிப்பிலான திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

அதனை தொடர்ந்து சூரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசியதாவது:-

சூரத்தை விமான நிலையத்துடன் இணைக்கும் சாலை, நகரத்தின் கலாச்சாரம், செழுமை மற்றும் நவீனத்தை பிரதிபலிக்கிறது. சூரத்திற்கு ஏன் ஒரு விமான நிலையம் தேவை, இந்த நகரத்தின் சக்தி என்ன என்பதை அப்போதைய காங்கிரஸ் அரசிடம் சொல்லி நாங்கள் சோர்வடைந்து விட்டோம். இன்று, இங்கிருந்து பல விமானங்கள் புறப்படுகின்றன.

கடந்த 10 ஆண்டுகளில் சூரத்தில் ஏழைகளுக்காக சுமார் 80,000 வீடுகளைக் கட்டி அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி உள்ளோம். ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ், நாட்டில் சுமார் 4 கோடி ஏழை நோயாளிகளுக்கு இலவச மருத்துவ சிகிச்சை கிடைத்துள்ளது. அதில் 32 லட்சத்துக்கும் அதிகமான நோயாளிகள் குஜராத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் 1.25 லட்சம் பேர் சூரத்தில் உள்ளனர். குஜராத்தில் உள்கட்டமைப்பு, விளையாட்டு மற்றும் ஆன்மீக இடங்களுக்கு அடிக்கல் நாட்டுவது எனது பாக்கியம்... சூரத் 'ஜன் பகிதாரி' ஒற்றுமைக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு. இந்தியா முழுவதும் உள்ள மக்கள் சூரத்தில் வசிக்கிறார்கள். இது ஒரு மினி இந்தியா.டிரீம் சிட்டி முடிந்த பிறகு சூரத் உலகின் பாதுகாப்பான வைரத்தின் வர்த்தக மையங்களில் ஒன்றாக இருக்கும்

இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
மேலும் செய்திகள்