< Back
தேசிய செய்திகள்
கொல்லூர் மூகாம்பிகை கோவிலில் பெண்ணிடம் சங்கிலி திருடிய வாலிபர் கைது
தேசிய செய்திகள்

கொல்லூர் மூகாம்பிகை கோவிலில் பெண்ணிடம் சங்கிலி திருடிய வாலிபர் கைது

தினத்தந்தி
|
3 July 2023 6:45 PM GMT

கொல்லூர் மூகாம்பிகை கோவிலில் கேரள பெண்ணிடம் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் இருந்து ரூ.4¾ லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மங்களூரு-

கொல்லூர் மூகாம்பிகை கோவிலில் கேரள பெண்ணிடம் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் இருந்து ரூ.4¾ லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கேரள பெண்ணிடம் திருட்டு

கேரள மாநிலம் காசர்கோடுவை சேர்ந்தவர் பிரவீனா. இவர் கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் பைந்தூர் தாலுகா கொல்லூரில் உள்ள மூகாம்பிகை கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்திருந்தார். அவர் சாமி தரிசனம் செய்ய வரிசையில் காத்து நின்றபோது, கூட்ட நெரிசலை பயன்படுத்தி அவர் வைத்திருந்த கைப்பையை யாரோ மர்மநபர்கள் திருடி சென்றுவிட்டனர். அதில் ரூ.4.75 லட்சம் மதிப்பிலான 108 கிராம் தங்க நகைகள் இருந்தது.

இதுகுறித்து பிரவீனா, கொல்லூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். கோவிலில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து மர்மநபரை போலீசார் தேடி வந்தனர்.

வாலிபர் கைது

இந்த நிலையில் கேரள பெண்ணிடம் தங்க நகைகளை திருடி சென்ற நபரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர் கிரீஷ் (வயது 34) என்பது தெரியவந்தது. அவர் சிவமொக்கா பஸ் நிலையத்தில் நின்றபோது போலீசார் அவரை கைது செய்திருந்தனர். அதாவது, கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் கிரீஷ் கைது செய்யப்பட்டார்.

இதையடுத்து அவரிடம் இருந்து ரூ.4.75 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான கிரீசிடம் கொல்லூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்