< Back
தேசிய செய்திகள்
கல்கட்டகியில் புதுமாப்பிள்ளை மீது இரும்பு கம்பியால் தாக்குதல்
தேசிய செய்திகள்

கல்கட்டகியில் புதுமாப்பிள்ளை மீது இரும்பு கம்பியால் தாக்குதல்

தினத்தந்தி
|
19 Jun 2023 12:15 AM IST

கல்கட்டகியில் புதுமாப்பிள்ளை மீது இரும்பு கம்பியால் தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது.

உப்பள்ளி-

தார்வார் மாவட்டம் கல்கட்டகி தாலுகா லிங்கனகொப்பா கிராமத்தை சேர்ந்தவர் சிவனகவுடா படேல் (வயது28). இவர் அதேப்பகுதியை சேர்ந்த அக்கமாதேவி என்ற பெண்ணை காதலித்து வந்தார். இந்த விவகாரம் பெண் வீட்டிற்கு தெரியவந்தது. இதற்கு பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அவர்கள் 2 பேரும் வீட்டிற்கு தெரியாமலே கடந்த வாரம் திருமணம் செய்து கொண்டனர். இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் அக்கமாதேவி தனது வீட்டிற்கு செல்ல வேண்டும் என சிவனகவுடாவிடம் கூறியுள்ளார். ஆனால் அதற்கு சிவனகவுடா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்தநிலையில், அக்கமாதேவி நேற்றுமுன்தினம் தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றார். அவரை அழைப்பதற்காக பெண்ணின் வீட்டிற்கு சிவனகவுடா சென்றார்.

அப்போது பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்துள்ளாய் என சிவனகவுடாவிடம் கூறினர். மேலும் அவர்கள் அருகே கிடந்த இரும்பு கம்பியால் சிவனகவுடாவை தாக்கி உள்ளனர். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு உப்பள்ளி கிம்ஸ் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக கல்கட்டகி டவுன் போலீசில் சிவனகவுடா புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் விசாரணை நடத்தி பெண்ணின் பெற்றோர் உள்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்