கோலார் தங்கவயலில்எல்.இ.டி மின் விளக்குகள் சீரமைப்பு பணிகள் தீவிரம்
|கோலார் தங்கவயலில் எல்.இ.டி மின் விளக்குகள் சீரமைப்பு பணிகள் தீவிரம் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
கோலார் தங்கவயல்,
கோலார் தங்கவயல் மாரிகுப்பத்தை அடுத்த கில்பர்ட்ஸ் பகுதியில் உள்ள தெரு விளக்கு பழுதடைந்து கிடப்பதாக பொதுமக்கள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டு வந்தது. இதுகுறித்து பொதுமக்கள் கவுன்சிலர் தங்கராஜிடம் கோரிக்கை வைத்தனர்.
அந்த கோரிக்கையை ஏற்ற அவர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் பழுதான தெருவிளக்குகளை நேரில் சென்று பார்வையிட்டார்.
அப்போது மின்வாரிய ஊழியர்களை அழைத்த அவர், உடனே அனைத்து தெருவிளக்குகளையும் சீரமைத்து கொடுக்கும்படி உத்தரவிட்டார்.
இதையடுத்து புதிய மின் விளக்குகள் பொருத்தும் பணிகள் நடந்தது. அதாவது பழைய மின் விளக்குகளை மாற்றிவிட்டு, புதிய எல்.இ.டி. மின் விளக்குகளை பொருத்தும் பணிகள் நடந்தது. அதன்படி 100-க்கும் அதிகமான மின் விளக்குகள் சீரமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதை பார்த்த பொதுமக்கள் கவுன்சிலருக்கு தங்கள் நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர்.