< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
கர்நாடகத்தில் 11 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது
|13 Jun 2022 2:44 AM IST
கர்நாடகத்தில் 11 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது
பெங்களூரு:
கர்நாடகத்தில் இதுவரை 11 கோடி டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதில் 5.45 கோடி முதல் டோஸ், 5.28 கோடி 2-வது டோஸ், 26.41 லட்சம் பூஸ்டர் டோஸ் போடப்பட்டு இருக்கிறது. இது மட்டுமின்றி சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
இதுகுறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, "கர்நாடகத்தில் தடுப்பூசி செலுத்துவதில் இன்னொரு மைல்கல்லை கடந்துள்ளோம். இது மகிழ்ச்சி அளிக்கிறது. சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் மற்றும் அத்துறை ஊழியர்களுக்கு எனது பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.