கர்நாடகாவில் சோளக்கொல்லை பொம்மைகளுக்கு பதில் சன்னி லியோன் படத்தை வைத்த விவசாயி
|கண் திருஷ்டி படக்கூடாது என விவசாயி ஒருவர் கவர்ச்சி நடிகைகளின் புகைப்படங்களை விளைநிலத்தில் வைத்துள்ளார்.
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் சிக்கபல்லபுராவில் உள்ள ஹண்டிகனாலா கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி தீபக். இவர் தனது நிலத்தில் தக்காளி பயிரிட்டுள்ளார். இந்நிலையில் தக்காளி செடிகள் செழிப்பாக வளர்ந்துள்ளதாக கிராம மக்கள் தீபக்கிடம் கூறியுள்ளனர்.
இதையடுத்து தக்காளி செடிகள் மீது கண்திருஷ்டி பட்டுவிடக் கூடாது என நினைத்த தீபக், பறவைகளை விரட்டுவதற்காக வைக்கப்படும் சோளக்கொல்லை பொம்மைகளை எடுத்துவிட்டு, அதற்கு பதிலாக கவர்ச்சி நடிகைகளான சன்னி லியோன், ரட்சிதா ராம் ஆகியோரது புகைப்படங்களை வைத்துள்ளார்.
இதனால் கண் திருஷ்டி கழிந்து செடிகள் சிறப்பாக வளர்வதாக நம்பி வரும் விவசாயி தீபக், தக்காளி விளைச்சல் அமோகமாக இருப்பதாகவும் நல்ல லாபம் கிடைப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதனிடையே, தக்காளி தோட்டத்தில் கவர்ச்சி நடிகைகளின் புகைப்படங்கள் இருக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வருகின்றன.