உப்பள்ளியில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை
|உப்பள்ளியில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.
உப்பள்ளி-
தார்வார் மாவட்டம் உப்பள்ளி தாலுகா நவநகர் பகுதியை சேர்ந்தவர் பிரியா (35). இவருக்கு திருமணமாகி கணவர் மற்றும் 2 குழந்தைகள் உள்ளன. பிரியா அப்பகுதியில் ஆயத்த ஆடை நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தில் 50-க்கும் மேற்பட்டோர் வேலை பார்த்து வருகிறார்கள். இந்தநிலையில் பிரியாவுக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இதனால் அவர் மன கவலையில் இருந்து வந்தார். மேலும் தொழிலாளர்களுக்கு சம்பள தொகை கொடுக்க முடியவில்லை. இ்ந்தநிலையில் நேற்றுமுன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பிரியா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த நவநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
பின்னர் பிரியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து நவநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.