< Back
தேசிய செய்திகள்
குஜராத்தில் ரிசர்வ் போலீஸ் படையினர் சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்து - 38 பேர் படுகாயம்
தேசிய செய்திகள்

குஜராத்தில் ரிசர்வ் போலீஸ் படையினர் சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்து - 38 பேர் படுகாயம்

தினத்தந்தி
|
31 Oct 2023 7:53 AM IST

விபத்தில் காயமடைந்த ரிசர்வ் போலீஸ் படையினரின் உடல்நிலை சீராக இருப்பதாக காவல்துறை அதிகாரி எம்.எல்.கோஹித் தெரிவித்துள்ளார்.

காந்திநகர்,

குஜராத் மாநிலம் பஞ்ச்மகால் மாவட்டத்தில் நேற்று மாலை மாநில ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த வீரர்கள் துப்பாக்கி சுடும் பயிற்சியை முடித்துக் கொண்டு போலீஸ் வாகனத்தில் திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் சென்ற வாகனம் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.

இந்த விபத்தில் வாகனத்தில் இருந்த 38 ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள் படுகாயமடைந்தனர். இதையடுத்து அப்பகுதியில் இருந்தவர்கள் விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது வீரர்களின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், வாகனத்தில் பிரேக் செயலிழந்ததால் விபத்து ஏற்பட்டதாகவும் காவல்துறை அதிகாரி எம்.எல்.கோஹித் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்