< Back
தேசிய செய்திகள்
கொப்பாவில்பள்ளி விடுதியில் மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை
தேசிய செய்திகள்

கொப்பாவில்பள்ளி விடுதியில் மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை

தினத்தந்தி
|
24 Aug 2023 12:15 AM IST

கொப்பாவில் பள்ளி விடுதியில் மாணவன் தூக்குப்போட்டு தற்கொைல செய்து கொண்டார். இதற்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சிக்கமகளூரு

உண்டு உறைவிட பள்ளி

சிக்கமகளூரு மாவட்டம் கொப்பா டவுனில் தனியார் உண்டு உறைவிட பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சீனிவாஸ் (வயது 14) என்ற சிறுவன் 9-ம் வகுப்பு படித்து வந்தான்.

இந்த நிலையில் நேற்றுமுன்தினம் வகுப்பறை முடிந்து மாணவன் விடுதிக்கு சென்றான். இரவு சீனிவாஸ் விடுதியில் சாப்பிட்டு விட்டு தனது அறைக்கு சென்றான். அப்போது நண்பர்கள் யாரிடமும் அவன் பேசமால் இருந்துள்ளான்.

இந்தநிலையில், இரவு 10 மணிக்கு மேல் அறையில் இருந்த மாணவர்கள் அனைவரும் தூங்கிவிட்டனர். அப்போது சீனிவாஸ் அறையின் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான்.

இந்தநிலையில் அதிகாலை சீனிவாஸ் தூக்கில் தொங்குவதை மாணவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அவர்கள் பள்ளி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கொப்பா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சீனிவாசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிக்கமகளூரு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அரசு ஊழியர்

விசாரணையில், சீனிவாசின் தந்தை கொப்பா தாலுகா அலுவலகத்தில் அரசு ஊழியராக பணியாற்றி வந்தார். இதனால் சீனிவாஸ் வீட்டில் இருந்தே பள்ளிக்கு சென்று வந்தான்.

இந்தநிலையில் கடந்த மாதம் சீனிவாசின் தந்தை அஜ்ஜாம்புராவிற்கு பணியிட மாறுதலாகி சென்றார். இதனால் சீனிவாசை அவரது தந்தை பள்ளியின் விடுதியில் சேர்த்தார்.

இந்தநிலையில் சீனிவாஸ் கடந்த ஒரு மாதமாக பள்ளியில் தங்கி படித்து வந்தான். மேலும் அவன் விடுதியில் கடந்த சில நாட்களாக யாரிடமும் பேசாமல் இருந்துள்ளான்.

விசாரணை

இந்தநிலையில் நேற்று முன்தினம் சீனிவாஸ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான். அவன் தற்கொலை ெசய்து கொண்டதற்கான காரணம் என்ன? என்பது குறித்து கொப்பா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்