< Back
தேசிய செய்திகள்
செல்லகெரேவில்  அரசு பஸ் கண்டக்டரை தாக்கிய 4 பேர் கைது
தேசிய செய்திகள்

செல்லகெரேவில் அரசு பஸ் கண்டக்டரை தாக்கிய 4 பேர் கைது

தினத்தந்தி
|
23 Jun 2023 12:15 AM IST

செல்லகெரேவில் அரசு பஸ் கண்டக்டரை தாக்கிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

சிக்கமகளூரு-

சித்ரதுர்கா மாவட்டம் ெசல்லகெரேவை சேர்ந்தவர் சந்திரிகா. இவர் செல்லகெரேவில் இருந்து பெங்களூருவுக்கு அரசு பஸ்சில் நேற்று முன்தினம் சென்றார். பெங்களூரு அருகே சென்றபோது டாபஸ்பேட்டை பகுதியில் சந்திரிகா பஸ்சை நிறுத்த கண்டக்டரிடம் கூறினார். அப்போது பணியில் இருந்து கண்டக்டர் சந்திர கவுடா, அவரை பெங்களூரு மெஜஸ்டிக் பஸ் நிலையத்தில் இறங்கும் படி கூறியுள்ளார். இதனால் அவர்கள் 2 பேருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் மெஜஸ்டிக் பஸ் நிலையத்தில் இறங்கி சென்றார். இந்தநிலையில் நேற்று செல்லகெரே பகுதியில் சந்திரிகா தனது உறவினர்களுடன் தன்னிடம் வாக்குவாதம் செய்த கண்டக்டருக்காக காத்து இருந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ்சை வழிமறித்தனர். அதில், இருந்த கண்டக்டர் சந்திர கவுடவை பஸ்சில் இருந்து இறக்கி சந்திரிகா மற்றும் அவரது உறவினர்கள் 4 சேர்ந்து சரமாரியாக தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதில் படுகாயம் அடைந்த சந்திரகவுடாவை பஸ் பயணிகள் மீட்டு செல்லகெரே அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து ெசல்லகெரே போலீசில் கண்டக்டர் புகார் அளித்தார். அதன்போில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்டக்டரை தாக்கிய சந்திரிகா, அவரது உறவினர்கள் மல்லிகார்ஜூன், சிவராஜ், நவீன் ஆகிய 4 பேரை கைது செய்தனர். மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்