< Back
தேசிய செய்திகள்
திருட்டு வழக்கில் ஜாமீனில் வெளிவந்து தலைமறைவாக இருந்தவர் கைது; 17 ஆண்டுகளுக்கு பிறகு போலீசில் சிக்கினார்
தேசிய செய்திகள்

திருட்டு வழக்கில் ஜாமீனில் வெளிவந்து தலைமறைவாக இருந்தவர் கைது; 17 ஆண்டுகளுக்கு பிறகு போலீசில் சிக்கினார்

தினத்தந்தி
|
24 Sept 2022 12:30 AM IST

திருட்டு வழக்கில் ஜாமீனில் வெளிவந்து தலைமறைவாக இருந்த வாலிபர் 17 ஆண்டுகளுக்கு பிறகு போலீசில் சிக்கினார்.

சிக்கமகளூரு;


சிக்கமகளூருவில் தொடா் திருட்டில் ஈடுபட்டு வந்த இம்தியாஸ் (வயது 45) என்பவரை கடந்த 2005-ம் ஆண்டு போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதையடுத்து அவர், ஜாமீனில் வெளியே வந்தார்.

ஆனால் அதன்பிறகு இம்தியாஸ், கோர்ட்டில் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதையடுத்து இம்தியாசுக்கு ஜாமீனில் இல்லா பிடிவாரண்டு பிறப்பித்து கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து போலீசார் அவரை தீவிரமாக தேடி வந்தனர். ஆனாலும், அவர் போலீசில் சிக்காமல் தலைமறைவாக இருந்து வந்தார்.

இந்த நிலையில் இம்தியாஸ், ஹாசனில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் ஹாசனுக்கு சென்று அங்கு பதுங்கி இருந்த இம்தியாசை கைது செய்தனர். சுமார் 17 ஆண்டுகளுக்கு பிறகு அவர் போலீசில் சிக்கி உள்ளார். இதையடுத்து போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்