< Back
தேசிய செய்திகள்
திருட்டு வழக்கில்   2 பெண்கள் கைது
தேசிய செய்திகள்

திருட்டு வழக்கில் 2 பெண்கள் கைது

தினத்தந்தி
|
7 July 2022 3:01 AM IST

திருட்டு வழக்கில் 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.

பெங்களூரு: பெங்களூரு மாகடி ரோட்டில் தொழில் அதிபர் ஒருவர் வசித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தொழில் அதிபர் குடும்பத்துடன் வெளியூர் சென்று இருந்தார். அப்போது அவரது வீட்டிற்குள் புகுந்த மர்மநபர்கள் தங்கநகைகள், பணத்தை திருடி சென்று இருந்தனர்.

இந்த நிலையில் தங்களது வீட்டில் வேலை செய்யும் ஜெயந்தி, சோனி ஆகியோர் மீது சந்தேகம் இருப்பதாக தொழில் அதிபர், மாகடி ரோடு போலீசில் புகார் அளித்து இருந்தார். அதன்பேரில் ஜெயந்தி, சோனியை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது தொழில் அதிபர் வீட்டில் திருடியதை 2 பேரும் ஒப்புக்கொண்டனர். இதனால் அவர்களை கைது செய்த போலீசார் ரூ.16 லட்சம் மதிப்பிலான தங்கநகைகள், வெள்ளி பொருட்களை பறிமுதல்செய்தனர்.

மேலும் செய்திகள்