< Back
தேசிய செய்திகள்
பத்ராவதி டவுனில்  பிரபல ரவுடி வெட்டிக்கொலை
தேசிய செய்திகள்

பத்ராவதி டவுனில் பிரபல ரவுடி வெட்டிக்கொலை

தினத்தந்தி
|
22 July 2023 12:15 AM IST

பத்ராவதி டவுனில் பிரபல ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். மர்மகும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

சிவமொக்கா-

பத்ராவதி டவுனில் பிரபல ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். மர்மகும்பலை போலீசார் வலைவீசி ேதடி வருகிறார்கள்.

பிரபல ரவுடி

சிவமொக்கா மாவட்டம் பத்ராவதி டவுன் பொம்மன கட்டே பகுதியை சேர்ந்தவர் முஜாகித் (வயது35). இவருக்கு திருணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் முஜாகித் அதேப்பகுதியை சேர்ந்த பெண்ணை 2-வதாக திருமணம் செய்தார். தற்போது அவருடன் முஜாகித் வசித்து வருகிறார்.

இவர் மீது பத்ராவதி போலீஸ் நிலையத்தில் கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. மேலும் முஜாகித், பத்ராவதி பகுதியில் பிரபல ரவுடியாக வலம் வந்துள்ளார். இந்தநிலையில் முஜாகித்துக்கும் அதேப்பகுதியை சேர்ந்த சில கும்பல்களுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இதனால் அந்த கும்பல்களுக்கும் முஜாகித்துக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு முஜாகித் பொம்மன கட்டே பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கும்பல் அவரை வழிமறித்து அரிவாள், இரும்பு கம்பிகளை கொண்டு தாக்க முயன்றனர். அப்போது முஜாகித் அங்கிருந்து தப்பி சென்றார்.

வெட்டிக்கொலை

இந்தநிலையில், நேற்றுமுன்தினம் இரவு 2-வது மனைவி வீட்டிற்கு முஜாகித் சென்றார். அப்போது அந்த வழியாக வந்த மர்மகும்பல் அரிவாளால் முஜாகித்தை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றது. இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து சம்பவ இடத்திலேயே முஜாகித் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து பேப்பர் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முஜாகித்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பத்ராவதி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பேப்பர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் மர்மகும்பலை வலைவீசி தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்