< Back
தேசிய செய்திகள்
பெலகாவி சுவர்ண சவுதாவில் கித்தூர் ராணி சென்னம்மா-சங்கொள்ளி ராயண்ணாவுக்கு சிலை; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவிப்பு
தேசிய செய்திகள்

பெலகாவி சுவர்ண சவுதாவில் கித்தூர் ராணி சென்னம்மா-சங்கொள்ளி ராயண்ணாவுக்கு சிலை; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவிப்பு

தினத்தந்தி
|
3 Oct 2022 12:30 AM IST

பெலகாவி சுவர்ண சவுதா வளாகத்தில் கித்தூர் ராணி சென்னம்மா, சங்கொள்ளி ராயண்ணா ஆகியோர் சிலை நிறுவப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்.

பெங்களூரு;

அரண்மனை கட்டப்படும்

பெலகாவி மாவட்ட நிர்வாகம், கன்னட வளர்ச்சித்துறை சார்பில் கித்தூர் ராணி சென்னம்மா விழா ரவீந்திர கலாஷேத்ராவில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கலந்துகொண்டு விழாவை தொடங்கி வைத்து பேசியதாவது:-

கித்தூர் ராணி சென்னம்மா விழா ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 30 ஆண்டுகளாக இந்த விழா நடக்கிறது. கித்தூர் ஜோதி யாத்திரை இன்று (நேற்று பெங்களூருவில் தொடங்கி கித்தூருக்கு செல்கிறது. கித்தூரில் உள்ள அரண்மனை சிதிலடைந்த நிலையில் உள்ளது. அதை மேலும் பலப்படுத்தப்படும். அதன் அருகிலேயே புதிதாக ஒரு அரண்மனை கட்டப்படும்.

சங்கொள்ளி ராயண்ணா

அத்துடன் கித்தூரை சுற்றுலா தலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். பைலஹொங்கலா, சங்கொள்ளி உள்ளிட்ட பகுதிகளும் மேம்படுத்தப்படும். சங்கொள்ளி ராயண்ணா பெயரி்ல் ராணுவ பள்ளியை தொடங்குகிறோம். இ்நத பள்ளியை அடுத்த மாதம் தொடங்கி வைக்க இருக்கிறோம். மேலும் ராயண்ணாவின் சமாதியை மேம்படுத்தும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

பெலகாவி சுவர்ண சவுதா வளாகத்தில் இந்த ஆண்டு கித்தூர் ராணி சென்னம்மா, சங்கொள்ளி ராயண்ணா ஆயோரின் சிலைகள் நிறுவப்படும்.இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.இதில் நீர்ப்பாசனத்துறை மந்திரி கோவிந்த் கார்ஜோள், நகராட்சி நிர்வாகத்துறை மந்திரி எம்.டி.பி.நாகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்