< Back
தேசிய செய்திகள்

தேசிய செய்திகள்
அசாமில் போலீஸ் டி.ஐ.ஜி.யிடம் செல்போன் பறிப்பு..!

24 July 2023 11:57 AM IST
அசாமில் போலீஸ் டி.ஐ.ஜி.யிடம் இருந்து செல்போனை மர்ம நபர்கள் பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனர்.
கவுகாத்தி,
அசாம் மாநில தலைநகர் கவுகாத்தியில் உள்ள உலுபரி பகுதியில் போலீஸ் தலைமையகம் அமைந்துள்ளது. அதன் அருகிலேயே மூத்த போலீஸ் அதிகாரிகளுக்கான குடியிருப்பு உள்ளது.
இந்த குடியிருப்பில் வசித்து வரும் மாநில போலீஸ் டி.ஐ.ஜி. விவேக் ராஜ் சிங் நேற்று காலை வழக்கம் போல் நடைபயிற்சிக்கு சென்றார். அவர் போலீஸ் தலைமையகத்துக்கு அருகே நடந்து கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் இருவர் விவேக் ராஜ் சிங்கிடம் இருந்து செல்போனை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து, செல்போன் பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். போலீஸ் டி.ஐ.ஜி.யிடமே செல்போன் பறிக்கப்பட்ட சம்பவம் அசாம் மாநில காவல் துறைக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.