< Back
தேசிய செய்திகள்
இந்தியாவில் சாலை பாதுகாப்பை மேம்படுத்தினால் ஆண்டுக்கு 30 ஆயிரம் பேர் உயிர் தப்பலாம் - ஆய்வில் தகவல்
தேசிய செய்திகள்

இந்தியாவில் சாலை பாதுகாப்பை மேம்படுத்தினால் ஆண்டுக்கு 30 ஆயிரம் பேர் உயிர் தப்பலாம் - ஆய்வில் தகவல்

தினத்தந்தி
|
1 July 2022 4:00 AM IST

‘சீட் பெல்ட்’ அணிந்து கொண்டு 4 சக்கர வாகனங்களை ஓட்டினால் 3,204 பேரது உயிரைக் காப்பாற்றலாம் எனவும் இந்த ஆய்வு முடிவு கூறுகிறது.

புதுடெல்லி,

இந்தியாவில் சாலை பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்தினால் ஆண்டுக்கு 30 ஆயிரம் பேர் உயிரைக் காப்பாற்ற முடியும் என்று 'தி லேன்செட்' பத்திரிகை ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது. குறிப்பாக அதிவேகம், மது குடித்து விட்டு வாகனம் ஓட்டுதல், ஹெல்மெட் இன்றி இரு சக்கர வாகனங்களை ஓட்டுதல், 'சீட் பெல்ட்' பயன்படுத்தாமை ஆகியவை ஆபத்து காரணிகளாக உள்ளன என இந்த ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதிவேகத்தில் வாகனம் ஓட்டுவதை கண்காணித்து தடுத்தால் மட்டுமே ஆண்டுக்கு 20 ஆயிரத்து 554 பேரை காப்பாற்ற முடியும், கடினத்தன்மை கொண்ட தொப்பி வகை ஹெல்மெட்டுகள் அணிந்தால் 5,683 பேரது உயிரை காப்பாற்ற இயலும். 'சீட் பெல்ட்' அணிந்து கொண்டு 4 சக்கர வாகனங்களை ஓட்டினால் 3,204 பேரது உயிரைக் காப்பாற்றலாம் எனவும் இந்த ஆய்வு முடிவு கூறுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் சாலை விபத்துகளில் 13½ லட்சம் பேர் உயிரிழக்கிறார்கள். இதில் 90 சதவீத இறப்புகள் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் நிகழ்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மேலும் செய்திகள்