< Back
தேசிய செய்திகள்
மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் - நவ்நீத் ராணா எம்.பி
தேசிய செய்திகள்

மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் - நவ்நீத் ராணா எம்.பி

தினத்தந்தி
|
25 Jun 2022 4:59 PM IST

மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என அமராவதி சுயேட்சை எம்.பி நவ்நீத் ராணா தொிவித்து உள்ளாா்.

மும்பை,

மராட்டியத்தில் சிவசேனா-காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணியில் மகாவிகாஸ் அகாடி என்ற கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டணி ஆட்சியில் சிவசேனா தலைவர் மராட்டிய முதல்-மந்திரியாக உத்தவ் தாக்கரே செயல்பட்டு வருகிறார்.

இதனிடையே, சிவசேனா கட்சியை மூத்த மந்திரி ஏக்நாத் ஷிண்டே மராட்டிய மகாவிகாஸ் அகாடி அரசுக்கு எதிராக திரும்பியுள்ளார். அவர் தனது ஆதரவாளர்களான 50 எம்.எல்.ஏ.க்களுடன் அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள ஓரு ஓட்டலில் தங்கியுள்ளார். இதில், 40 எம்.எல்.ஏ.க்கள் சிவசேனாவை சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

இதனால், மராட்டியத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான மகாவிகாஸ் அகாடி அரசு கவிழும் சூழ்நிலை உருவாகியுள்ளது. உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக திரும்பியுள்ள எம்.எல்.ஏ.க்களை கண்டித்து சிவசேனா கட்சி தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என அமராவதி சுயேட்சை எம்.பி நவ்நீத் ராணா தொிவித்து உள்ளாா்.

இது குறித்து அவா் தொிவிக்கையில், "ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அசல் சிவசேனா அணிக்கு சென்ற எம்.எல்.ஏக்கள் மற்றும் அவா்களது குடும்பத்தினரை பாதுகாக்குமாறு மத்திய உள்துறை மந்திாி அமித்ஷாவிடம் கேட்டுக்கொள்கிறேன்.

மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தப்பட வேண்டும். இதனால் உத்தவ் தாக்கரேவின் போக்கிரித்தனம் தடுக்கப்பட்டு, மராட்டிய மக்கள் அதிலிருந்து பாதுகாக்கப்படுவார்கள் " இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளாா்.

மேலும் செய்திகள்